அடுத்த வகை கொரோனா உருமாற்றத்தில் பெயர் வைரஸ் ‘மியு’ !

கொரோனா தொற்று சீனா நாட்டில் இருந்து பரவி உலகம் முழுவதும் தன் வசமாக்கியுள்ளது.மேலும் உலக நாடுகளில் இது உருமாறிவருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை பாதிப்பால் அதிக தொற்று பரவியது.மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதிப்பு அதிகம்.

தற்போது கொரோனா மியு (MU) B.1.621 என்ற உருமாற்றத்தை எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இந்த வகை கொரோனா மிகவும் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இது வரை பதிவுசெய்யப்பட்டது.தற்போது முதல் முறையாக கொலம்பியாவில் கண்டறியப்பட்ட மியு வகை உருமாற்ற வைரஸ், மிகவும் சக்தி வாய்ந்த வைரஸ் ஆக இருப்பதாகத் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.