ஒருவழியாக திறக்கப்பட்ட பள்ளிகள்..மாணவர்கள் மகிழ்ச்சி !

cbse-term-1-results-2021-important-announcement-about-result-date
CBSE பருவம் 1 முடிவுகள் 2021

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.ஒரு வருட காலத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

மேலும் மேலும் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்.,1ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக வீட்டில் முடங்கி கிடந்த மாணவர்கள் இன்று மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.