என்னது..வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையா !

விடுமுறை நாட்கள், சம்பளம் மற்றும் ஊழியர்களின் வேலை நேரம் குறித்து இந்த மசோதாவின் கீழ் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதில் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய சிஸ்டத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ் ஊழியர்களின் வேலை நேரத்தை 9 முதல் 12 மணிநேரம் வரை அதிகரிக்க வேண்டும்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்படி, ஒரு வாரத்தில் 48 மணிநேர வேலை என்ற விதி பொருந்தும். சில தொழிற்சங்கங்கள் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு விதியை கேள்விக்குள்ளாக்கியிருந்தன.

ஒரு வாரத்தில் 48 மணிநேர வேலை என்ற விதியின் கீழ், ஒரு ஊழியர் 8 மணி நேரம் வேலை செய்தால் அவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் என்றும் யாராவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், அந்த ஊழியர் விடுப்பு கொடுக்க வேண்டும்.