உலகின் மாசுபட்ட நகரங்களில் அதிகம் இருப்பது இந்தியாவில் தான் !

உலகளவில் வெளியிடப்பட்ட ‘உலக காற்றின் தர அறிக்கை, 2020’ சுவிஸ் அமைப்பான ஐ.க்யூயர் இந்த அறிக்கையைத் வெளியீட்டுள்ளது.இதில் உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் அதிகம் உள்ளது இந்தியாவில் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 உலகின் நகரங்கள் இடம் பெறுகின்றன.மேலும் இதில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலும் டெல்லியின் கடந்த 2019 முதல் 2020 வரை காற்றின் தரம் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை,உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 21 இந்திய நகரங்கள் டெல்லி,காசியாபாத், புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் உத்தரபிரதேசத்தில் முசாபர்நகர், ராஜஸ்தானில் பிவாரி, ஜிந்த் , ஹிசார், ஃபதேஹாபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனநகர், ரோஹ்தக் மற்றும் ஹரியானாவில் உள்ள தருஹேரா, பீகாரில் முசாபர்பூர் அகியானவையாகும்.