இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 562.34 புள்ளிகள் குறைந்தது.பிஎஸ்இ குறியீட்டு எண் 562.34 புள்ளிகள் அல்லது 1.12 சதவீதம் சரிந்து 49,801.62 ஆக முடிந்தது. என்எஸ்இ நிஃப்டி 189.15 புள்ளிகள் அல்லது 1.27 சதவீதம் சரிந்து 14,721.30 ஆக இருந்தது.

இன்றைய நிலவரம் படி ஓ.என்.ஜி.சி 5 சதவீத சரிவைக் கண்டது இதை தொடர்ந்து என்.டி.பி.சி, சன் பார்மா, எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உள்ளன.

மேலும் ஐ.டி.சி, இன்போசிஸ், டி.சி.எஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவை ஏற்றத்தை பெற்றன.