இனி நீங்களும் வாக்களிக்கலாம் – வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக இயங்கி வருகிறது.

மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வாக்கை செலுத்தவும் தேவையான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இந்நிலையில்,வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இதர காரணங்களுக்காக வெளிநாடு சென்று அந்த நாட்டின் குடியுரிமை பெறாத இந்தியக் குடிமக்கள், அவர்களின் கடவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியில் இந்தியாவில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

இவர்கள் அனைவரும் www.mvsp.in அல்லது தேர்தல் ஆணையத்தின் www.eci.nic.in என்ற இணையதளத்தில் படிவம் 6ஏ என்பதைப் பதிவிறக்கம் செய்து தேவையான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்ப படிவத்தை அவர்கள் வசித்து வரும் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டு வாக்காளருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்கும் போது மூலக் கடவுச் சீட்டை ஆதாரமாகக் காண்பித்து வாக்களித்துக் கொள்ளலாம்.