மதுரை சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு !

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மேலும் ஏப்.24-ல் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் மற்றும் ஏப்.25-ல் தேரோட்டமும் நடைபெறுகிறது.இந்த சித்திரை திருவிழா தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சைவம் மற்றும் வைணவத்தை இணைத்து இந்த விழாவை கொண்டாடினர்.