இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது !

உலக புத்தக தினம் ஏப்.23-ம்தேதி கொண்டாடப்படுகிறது.இந்நாளில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்.1995 ல் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.உலக புத்தக தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் #worldBookDay எனும் ஹாஷ்டேகுடன் புத்தக பிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

புத்தகம் படிப்பதன் மூலம் உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.புத்தகம் வாசிப்பு மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி. மேலும் இது நியாபக சக்தியை அதிகரிக்கும்.

புத்தகம் படிப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும்.பல சந்தர்ப்பங்களில் சரியான முடிவை எடுக்க வழி காட்டுகிறது.பல தரப்பட்ட புத்தகங்களைப் படிப்பது நமக்குப் புதிய எண்ணங்களை, மாற்று கருத்துகளைக் கொண்டு வரலாம்.

தினமும் அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.எனவே ஒவ்வொரு வீட்டிலும், நல்ல புத்தகங்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற் படுத்திக் கொள்ள வேண்டும்.