இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.75 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது.