10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேர்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.