சிறை செல்ல நான் தயார்: நடிகை கங்கனா

என்னை சிறையில் அடைக்க இந்த அரசு காத்திருக்கிறது’ என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது, போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும், அந்தேரி நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கலாகி உள்ளது.

இது குறித்து கங்கனா நேற்று கூறும்போது, ”இந்த அரசு, என்னை சிறையில் அடைக்க காத்திருக்கிறது. நானும் சிறை செல்ல தயாராக இருக்கிறேன்,” என்றார்.