birth at home : அதிர்ச்சி யூடியூப் பார்த்து பிரசவம் !

birth at home : அதிர்ச்சி யூடியூப் பார்த்து பிரசவம்
அதிர்ச்சி யூடியூப் பார்த்து பிரசவம்

birth at home : சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.கேளிக்கை வீடியோ கள் பார்ப்பது இவைகளை தாண்டி மக்கள் இதை பார்த்து ஆபத்தான நேரங்களில் சிக்கிவிடுகிறாரகள்.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.birth at home

யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.லோகநாதன் மற்றும் கோமதி ஆகிய இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சமீபத்தில் கோமதி கர்பமாக இருந்துள்ளார் இந்த நிலையில் அவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி பிரசவ நாள் என்று மருத்துவர்கள் குறித்து இருந்தனர்.

மேலும் கடந்த 18 ஆம் தேதி அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவன் லோகநாதன் மற்றும் அவனது அக்கா கீதாவின் உதவியுடன் மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.இந்த விபரீத விளையாட்டில் ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.மற்றும் மனைவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,அவர் தனது மனைவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க : Happy birthday Nazriya : நடிகை நஸ்ரியா நசீம் பிறந்தநாள் இன்று !