படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவாளர் பலி !

நடிகர் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் ‘ரஸ்ட்’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் தளத்தில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் படத்தின் ஒளிப்பதிவாளர் பலியாகியுள்ளார்.

இதில் படப்பிடிப்புக்காக போலியான ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது. வெடித்தால் சப்தம் மட்டும் வருவது போன்ற இந்தத் துப்பாக்கியை நடிகர் அலெக் பால்ட்வின் இயக்கத்தில் உண்மையாகவே அதிலிருக்கும் குண்டு பாய்ந்துள்ளது.

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே பிரபலமாக இருக்கும் சாண்டா ஃபேவுக்கு அருகிலுள்ள தயாரிப்பு இடமான பொனன்சா க்ரீக் என்ற இடத்தில இந்த சம்பவம் நடந்தது.

இதில் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இறந்துள்ளார்.மேலும் இயக்குனர் படுகாயம் அடைந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : அழகான நீண்ட கூந்தலுக்கு இதோ டிப்ஸ் !