அழகான நீண்ட கூந்தலுக்கு இதோ டிப்ஸ் !

பெண்களுக்கு தலைமுடி முடி மிகவும் பிடிக்கும் அதிலும் ஆரோக்கியமான நீண்ட தலைமுடியன்றால் யாருக்கு தான் ஆசை வராது.இப்படி அழகான தலைமுடியை நாம் வீட்டிலிருந்தே பெறலாம்.அதற்கான சில வழிமுறைகள்.

கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலை இரண்டுமே தலைமுடிக்கு சிறந்தது.கறிவேப்பிலை இளநரை பிரச்சனையை தீர்க்க கூடியது. இந்த இரண்டையும் அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம். இப்படி குளித்து வந்தால் தலைமுடி கருகருவென வளரும்.

வெந்தயம் 3 டீஸ்பூன் இதை ஊறவைத்துக்கொள்ளவும்.பிறகு இதை அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு தலையில் தேய்த்து குளித்து வர சருமம் அடர்த்தியாக வளரும்.

வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ஆலிவ் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து பேக் போட்டு தலையை அலச வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் தலைமுடிக்கு சத்து கிடைப்பதோடு முடி நன்றாக வளரும்.

இதையும் படிங்க : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !