இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய ஐபோன்

குளியலறை அருகே சார்ஜ் போட்டப்பட்டிருந்த ஐபோன் சார்ஜ் வையருடன் தண்ணீர் இருந்த குளியலறை தொட்டிக்குள் விழுந்ததில் தொட்டிக்குள் குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேதபரிசோதனையில் குளியலறை தொட்டி அருகே சார்ஜ் போடப்பட்டிருந்த சிமினோவாவின் ஐபோன் 8 செல்போன் சார்ஜருடன் தவறுதலாக சிமினோவா குளித்துக்கொண்டிருந்த குளியலறை தொட்டிக்குள் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிமினோவா உயிரிழந்தது உறுதியானது.  


சிமினோவாவின் உயிரிழப்பை தொடர்ந்து குளியலறையில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.