800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரு கிரகங்கள் இணைந்து நட்சத்திரம் போல ஒளிரும் நிகழ்வு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று ஞானியர் சிலர் குழந்தை இயேசுவை பார்த்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய நட்சத்திரம் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



