ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் குளிர் மைனஸ் 40 டிகிரி

இந்திய எல்லையான லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவம் எல்லையில் படைகளை குவித்து வந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், படைகள் பின்வாங்கின. இருப்பினும், சீனா அடிக்கடி அத்துமீறுவதால், பதற்றம் நீடித்தே வருகிறது.

இதுவரை பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், பதற்றம் ஓயவில்லை. இதனால், இருநாட்டு வீரர்களும் லடாக் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு தற்போது குளிர் வாட்டுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 14,500 அடி உயரத்தில் இருக்கும் லடாக் பகுதியில் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது.

இதனால், கடும் குளிரை தாங்கும் குடில்கள், சமையல் செய்வதற்கான வசதி மற்றும் கழிவறைகள் கட்டமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன.