நடப்பாண்டு கடுமையான குளிர் நிலவ வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

நடப்பு ஆண்டு குளிர் காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவு குளிர் இருக்கும்
என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குனர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறுகையில், “ பலவீனமான லா நினா வானிலை நிலைமை நிலவுவதால், இந்த ஆண்டு அதிக குளிரை எதிர்பார்க்கலாம்.” என்றார்.

கடும் குளிரால் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்த மொஹாபத்ரா அதிகபட்ச குளிருக்கு ஒழுங்கற்ற வானிலையே காரணம்”என்றார்.

லா நினா என்பது பசிபிக் கடலின் குளிர் நிலையை விவரிக்கும் ஒரு காலநிலை முறையாகும். லா நினா சூழல் நிலவினால் கடும் குளிரும் எல் நினோ சூழல் நிலவினால் குளிர் குறைவாக இருக்கும் என்றும் மிருதுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here