ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் நட்புறவை வளர்க்க விரும்பும் சீனா !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயராக இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள்.

தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்பு உறவை வளர்க்கத் தயாராக இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானுடன் நட்பு மற்றும் கூட்டுறவு உறவுகளை தொடர்ந்து வளர்க்க தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறியுள்ளார்.

தலிபான்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாமல் ஆப்கான் அரசு தினறியது.தலிபான்கள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது குடும்பம், தலைமைத் தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் பாகிஸ்தான் நட்பு கொள்ள தயார் என்று கூறிய நிலையில் தற்போது சீனா அரசும் தலிபான்களுடன் கைகோர்த்துள்ளது.