நியாயவிலைக் கடைகளில் இனி குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம் !

தமிழகத்தில் கடந்த 13 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடந்தது.இதில் முதியோருக்கு பதில் யார் ரேஷன் பொருட்கள் பெறலாம் என்ற கேள்வி குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.

கைரேகை மூலம் ரேசன் பொருள்கள் வாங்குவது, என்னும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வருகிறது.குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யரேனும் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம்.

குடும்பத்தில் இருந்து 5 வயதுக்கு மேற்பட்ட யாரேனும் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.