விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைவரும் பிரபலமாகி விடுகின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கரின் 8 வது சீசனின் நடுவர்களில் பின்னணி பாடகர் பென்னி தயாளும் ஒருவர். இவருடன் அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து பென்னி தயாள் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த எலிமினேஷன் காரணமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்ச்சித்துவருகின்றனர்.
இதனால் பென்னி தயாள் சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிரடியாக பென்னி தயாள் அறிவித்துள்ளார்.



