ஆன்லைன் வகுப்புக்கு முற்றுப்புள்ளி..கல்லூரிகள் திறப்பு !

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் மூடப்பட்டன.இந்நிலையில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன.

தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு மேலாக மருத்துவம் சார்ந்த அனைத்துக் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

மேலும் தமிழக அரசு ,மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன.மேலும் கல்லூரிகளில் கட்டாயம் முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.