அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளது – ஸ்டாலின்

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்
நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளதாகவும், திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எக்காரணத்தை கொண்டும் பின்வாங்க மாட்டோம் எனவும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், கடந்த ஆக.,13ல் பொது பட்ஜெட்டும், 14ல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக.,16) தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

நாட்கள் நடக்கும் விவாதத்தின் கடைசி நாளான 19ம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்கள் பதில் உரையாற்றுவார்கள். இன்றைய விவாதத்தின்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ ., ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்போம் என கூறினீர்கள், கொடுத்தீர்களா? மோனோ ரயில் கொண்டு வருவோம் என சொன்னீர்கள், கொண்டு வந்தீர்களா? அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளது. உங்கள் ஆட்சியில் செய்யவில்லை என்று கேட்டதற்கு நாங்கள் செய்யமாட்டோம் என்று அர்த்தம் இல்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எக்காரணத்தை கொண்டும் பின்வாங்க மாட்டோம். விவசாயிகளின் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் குறைகள் உள்ளதால் அவற்றை சரிசெய்வோம். அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு பற்றி ஆதாரத்துடன் மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.