கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் வரும் கைவலிக்கு எப்சம் உப்பு..!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கைவலி ஏற்படுவது பொதுவான ஒரு அறிகுறியாக இருக்கிறது.

கையில் தடுப்பூசி போடப்படும் இடம் மற்றும் அதைச் சுற்றி, வீக்கம் ஏற்பட்டு, அதனால் வழியும், லேசான சோர்வும் உண்டாகும். ஒரு சிலருக்கு வலி மிகவும் லேசானதாகவும், சிலருக்கு மிகவும் அதிக அளவிலும் ஏற்பட்டு, கையை அசைக்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.

தடுப்பூசி சில நேரங்களில் தசை வழியையும் ஏற்படுத்தலாம். இந்த வலி அதிகமாகும் போது, சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் காணப்படும் அறிகுறிகள் போல தோன்றுகின்றன என்று சிலர் கூறுகிறார்கள்.

உங்கள் கை வலி, வீக்கம் மற்றும் சோர்வின் தீவிரத்தை குறைக்க, அல்லது நீக்க மற்றும் பக்க விளைவுகளிலிருந்து விரைவாக மீட்க ஒரு சில வழிகள் உள்ளன. புண் மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஊசி போடப்பட்ட இடத்தில் ஐஸ் பேக், சூடான / இதமான வெப்ப நீர் பயன்படுத்தி கம்ப்ரஸ் செய்வது போன்ற சிகிச்சை முறைகளை பெரும்பாலான நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்சம் உப்பு குளியல் எடுத்துக்கொள்வதும் வலியைக் குறைக்க உதவும்.

வீக்கம் மற்றும் வலியை நிர்வகிக்க, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், அவற்றை ஊசி போட்டுக்கொள்ளும் முன்னர் எடுத்துக்கொள்வது அவ்வளவு உதவியாக இருக்காது, மேலும், இதனை உண்மையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.