சீன நாட்டில் கரோனா ஆய்வு – உலக சுகாதார அமைப்பு !

கரோனா தொற்று சீன நாட்டிலிருந்து பரவியதன் காரணமாக அந்த நாட்டில் ஆய்வு செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன.இதை ஏற்ற உலக சுகாதார அமைப்பு, அறிவியல் வல்லுநர் குழுவினர் கரோனா பரவல் குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்வார்கள் என அறிவித்தார்கள்.

வரும் வியாழக்கிழமை சீனா வரவுள்ளதாக, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.முன்னதாக, சீனாவில் ஆய்வுப் பணியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானோம் அதிருப்தி தெரிவித்திருந்தார்.