சீனா பரிசோதனை மையத்தியிலிருந்து வைரஸ் பரவவில்லை – உலக சுகாதார அமைப்பு !

கரோனா தொற்றால் உலகம் பெரும் அழிவை சந்தித்துள்ளது.இந்த தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.மேலும் கடந்த வருடம் உலக வரலாற்றில் கருப்பு பக்கமாக மாறியுள்ளது.

இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற பல மர்மங்கள் பல நாடுகளில் நிலவி வருகிறது.சீனாவின் வூகான் மாகாணத்தின் சந்தையில் இருந்து தான்வைரஸ் பரவியது எனக் கூறப்பட்டு வருகிறது என்றாலும், வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்தியிலிருந்து வைரஸ் பரவியிருக்ககூடும் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மேலும் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சீனாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தியதன் முடிவு வெளிவந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரி பீட்டர் பென் எம்பரெக் கூறியது,

வூகான் நகரில் உள்ள பரிசோதனை மையத்திலிருந்து வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை. எங்கள் ஆய்வில் சீன அரசு முழு ஒத்துழைப்பு அளித்தது, அதுமட்டுமல்லாமல், 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூகான் நகரில் கரோனா வைரஸ் பரவவில்லை எனத் தெரிவித்துள்ளார்.