தன் நடிப்பை பற்றி பாலிவுட் நடிகை கங்கனாவின் ட்வீட் !

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு சற்றும் குறைவில்லாதவர்.அவ்வப்போது சில சர்ச்சை கூறிய ட்வீட் மற்றும் பேச்சாலும் பிரச்சனையில் சிக்குவார்.தற்போது மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா குறித்த சுயசரிதை படத்தில் நடித்து வருகிறார் கங்கனா.

தற்போது அவர் பதிவிட்ட ஒரு டீவீட்டில் நடிகையாக என்னிடம் உள்ள திறமை உலகில் வேறு எந்த நடிகையிடம் இல்லை மேலும் அவர் தன்னை மெரில் ஸ்ட்ரீப் மற்றும் கால் கேடட் போன்ற நடிகைக்கு இணையானவர் நான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிப்பில் வித்தியாசமான முறையை வெளிப்படுத்தும் என்னை போல் ஒரு நடிகை உண்டா என்று தற்பெருமை பேசியுள்ளார்.இந்த டீவீட்டால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள்.