சாதனை நிகழ்த்திய ஹோப் விண்கலம் கொண்டாட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் !

ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவு திட்டமான ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. ஏழு மாதத்துக்கு முன்னர், விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

உலகில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய ஐந்தாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் பெருமையை அடைந்துள்ளது.இதுகுறித்து முகமத் பின் ராஷித் விண்வெளி மையத்தின் இயக்குனர் ஒம்ரான் ஷராஃப் கூறியது , செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஹோம் விண்கலத்தை நிறுத்துவது என்பது மிகவும் முக்கியமானது.

தற்போது நாங்கள் எங்கள் அறிவியல் சுற்றுப்பாதையில் மாறுவதற்கும், அறிவியல் தரவு சேகரிப்பைத் தொடங்குவதற்கும் தயாராகி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.