சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ரா திருமணத்திற்கு ரெடி !

நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் இவர் சின்னத்திரை பிரபலமான விஜே மற்றும் நாடகங்களில் கதாநாயகி வேடங்களில் நடிப்பவர்.நல்ல பேச்சு திறமை மற்றும் நடிப்பால் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தவர்.இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இவரது திருமண நிச்சயதார்த்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.கடந்த மாதம் இவருக்கும் மற்றும் இவர் காதலர் ராகவ்விற்கும் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலை மாற்றி, மோதிரம் போட்டு உறவினர்கள், நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழா போட்டோக்களை பதிவிட்டார்.

அவர்களது ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.