என்னது ..இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலையா !

இந்தியாவில் அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்று ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் என 6 நாட்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.தற்போது மத்திய அரசு விரைவில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற திட்டம்.காரோண தொற்று காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கிறது.

இந்தநிலையில் தொழிலாளர்கள் இனி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை விரைவில் மத்திய அரசு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.