வார இறுதி ஊரடங்கு அமல் – மகாராஷ்டிரா !

மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளது.மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் முழுமையான வார இறுதி ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும் , தினசரி இரவு ஊரடங்கு உத்தரவும் பின்பற்ற படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.மற்றும் வார நாட்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மாநிலத்தில் இரவு ஊரடங்கு பின்பற்றப்படும்.மால்கள், உணவகங்கள், பார்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் நேற்று மகாராஷ்டிராவில் 49,447 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 29,53,523 ஆக உயர்ந்துள்ளது.