உத்தரகண்டில் பயங்கர காட்டுத் தீ !

உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று 62 ஹெக்டேர் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும் மாநில வனத்துறையின் 12,000 காவலர்கள் மற்றும் தீயணைப்பு கண்காணிப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கூறுகையில், நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் 12,000 வனத் தொழிலாளர்கள் மற்றும் 1,300 பணியாளர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல், மாநிலத்தில் 983 காட்டுத் தீ சம்பவங்கள் 1,292 ஹெக்டேர் நிலத்தை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்பு பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.