செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க தயார் !

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி எழத்தொடங்கின.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது ,தமிழகத்தில் 9 முதல் 12 வரை வகுப்புகளுக்கு செப்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

முதல்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வருவதற்கும் பாடங்கள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.