முதல் டெஸ்டில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் விதித்து ஐசிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது இரு அணிகளும் ஓவர்களை வீச அதிக நேரங்களை எடுத்துக் கொண்டதாகவும், 40 சதவிகிதம் அபராதத்தை இன்டர்நேஷனல் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

மேலும், இரண்டு அணிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் டெஸ்டில் எடுத்துள்ள தலா 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி நீக்கியுள்ளது.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும் இந்தியாவும் மோதுகின்றன.



