ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும்:தமிழக முதல்வர் !

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் திமுக ஆட்சி வெற்றிபெற்று தமிழக முதல்வரானார் ஸ்டாலின்.தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.

தற்போது ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கொரோனா தொற்றின் பரவல் இருப்பதால் வரும் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சோழ மன்னர் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்று வென்றதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி, பிரமாண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழர்களின் கட்டடக் கலையை பார்த்து வியக்கும் இடமாக இது விளங்குகிறது.

இந்நிலையில், ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, அவருடைய பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.