நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில காலமாக உடல்நல குறைவால் உள்ளார்.தற்போது உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அவர் என்ன காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று சரிவர தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சரியாக பேச முடியாத நிலைமைக்கு ஆளாகி உள்ளார்.அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.



