‘நாங்கள் மதம் சார்ந்த அரசியல் செய்யவில்லை’ – கே.டி. ராகவன்

நாங்கள் மதம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் கூறியுள்ளார்.

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியளிக்காதது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் கூறுகையில், அதிமுக ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறியுள்ளார்.

அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள உடன்படிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், வேல் யாத்திரைக்கு மட்டும் அனுமதி வழங்காமல் மற்ற அனைத்து போராட்டங்களுக்கும் அதிமுக அரசு அனுமதி வழங்குவது ஏன் என்றும் கேட்டுள்ளார்.