பிங்க் வாட்ஸ்அப் பற்றி தெரியுமா?

பிங்க் வாட்ஸ்அப் என்ற பெயரில் பரவும் லிங்குகளால், செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.

பிங்க் வாட்ஸ் “Pink WhatsApp” என்ற பெயரில் அல்லது வேறு ஏதேனும் பெயரில் ஆப்(App)களை பதிவிறக்கம் செய்யுமாறு  லிங்க்குகள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். உங்கள் தொலைபேசி ஹேக் (HACK) செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும் என சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் எச்சரித்துள்ளார்.

அந்த லிங்கை தொட்டாலே உடனடியாக பதிவிறக்கம் செய்தவர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் திடீரென பரவுவதாக சைபர் தொழில்நுட்ப வல்லுனர்களும் எச்சரித்துள்ளனர். கூகுள் மற்றும் ஆப்பிள் தளங்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை தவிர்த்து வேறு எந்த ஒரு அப்ளிகேஷனையும் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.