கரோனா தொற்றுக்கு எதிரான போர்!

கரோனாவுக்கு எதிரான போரில் உலகம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கரோனா வைரஸுக்கு இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இது நீளும் என்று அஞ்சுகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் உலகம் உள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.