உலகின் நெ.1 பணக்காரர் யார் தெரியுமா?

அமேசான் நிர்வாக அதிகாரி ஜெஃப் பைசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் நெ.1 பணக்கார் ஆனார் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்.

லூயிஸ் உய்ட்டன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 186.3 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக 186 பில்லியன் டாலர் உடன் ஜெப் பைசோஸ் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் 147.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உள்ளார்.