உங்களுக்கு வைட்டமின் பி 12 குறைவாக உள்ளதா..இனி கவலை வேண்டாம் இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !

Vitamins supplements as a capsule with fruit vegetables nuts and beans inside a nutrient pill as a natural medicine health treatment with 3D illustration elements.

வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்படவும் இது உதவுகிறது.இந்த வைட்டமின் பி 12 குறைவாக இருந்தால் உடல் மிகவும் சோர்வாக இருக்கும்.மேலும் கை மற்றும் கால் மூட்டுகளில் வலி இருக்கும்.இதை நாம் உணவு முறைகளிலேயே சரி செய்து விடலாம்.

முட்டையின் இந்த வைட்டமின் பி 12 இருக்கிறது.மஞ்சள் கருக்களில் வெள்ளை பகுதியை விடவும் அதிக வைட்டமின் பி12 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

சால்மன், சார்டைன்கல், டூனா மற்றும் டிரவுட் போன்ற மீன்களில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருக்கிறது.வைட்டமின் பி12 நிறைந்திருக்கும் மற்றொரு உணவு வகை நண்டுகளாகும் இதில் ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் மற்றும் இதில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருக்கிறது.

வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய சீஸை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.சோயா பாலில் வைட்டமின் பி12 அதிகம்.சோயா பால் பிடிக்காதவர்கள் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளலாம்.இதில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் பி12 சத்தில் 50 சதவீதத்தைப் பெறலாம்.