தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தின் பாடல் நாளை வெளியீடு !

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் கர்ணன் வெளியாகும் என அறிவித்தது.இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் நாளை வெளியிடப்படும் என கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.