கதையின் நாயகன் விசுவின் பிறந்தநாள்

நாயகனைச் சுற்றியுள்ள கதையை, சினிமாவாக்கிக் கொண்டிருக்கும் காலம்தான் இப்போது. அந்த நாயகனைச் சுற்றி மட்டுமே கதை பண்ணுவது அதிகரித்துவிட்டது. ஆனால் விசுவின் படங்கள் அப்படியல்ல. அவை நாயகனைச் சுற்றிய கதையாக இருக்கவில்லை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தருகிற விதமாக படமெடுக்கவில்லை. நாயகனையும் குடும்பத்தையும் பிரித்துக் கதை பண்ணவில்லை அவர். சொல்லப்போனால், அவர் படத்தில் கதையின் நாயகன்… கதை தான்!

கடந்த ஆண்டு அவர் காலமானார். ஒவ்வொரு முறை விசுவின் படம் பார்க்கப்படுகிற போதும், புதிதாகப் பிறந்துகொண்டே இருப்பார் விசு.
இன்று நடிகரும் இயக்குநருமான விசுவுக்கு 76வது பிறந்தநாள்.