விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா திருமண கொண்டாட்டம் !

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா திருமணம் இன்று நடந்து முடிந்தது.ஆந்திராவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வந்தார் விஷ்ணு விஷால்.

அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதை விஷ்ணு விஷால் உறுதி செய்தார்.

இன்று விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டாவின் திருமணம் ஹைதராபாத்தில் தெலுங்கு முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதை தொடர்ந்து அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.