சுமித்ரா மகாஜன் பற்றி சசிதரூர் ட்வீட் ! !

முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தனது ட்விட்டரில் தவறாக கூறியதால் அணைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமித்ரா மகாஜனின் கரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சஷி தரூரின் ட்வீட்டுக்கு பதிலளித்த பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா சுமித்ரா மகாஜன் “முற்றிலும் நன்றாக இருக்கிறார்” என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பிறகு சசிதரூர் அவருக்கு நன்றி தெரிவித்து தனது பதிவை டெலீட் செய்தார்.