மத்திய அரசுக்கு ஆக்சிஜன் கேட்டு கோரிக்கை விடுத்த கர்நாடகா !

கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா,கர்நாடகா,டெல்லி ஆகியவையாகும்.இந்த மாநிலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில்,1,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், ரெம்டெசிவிரின் ஒரு லட்சம் டோஸ்களும் வழங்குமாறு கர்நாடகா மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மத்திய ரயில்வே, வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார்.

மேலும் ,70,000 ரெம்டெசிவிர் ஊசியை மாநில அரசு ஆர்டர் செய்துள்ளதாகவும், அவற்றில் 20,000 வந்துவிட்ட நிலையில் மீதமுள்ளவை வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.