மே 1 முதல் இலவச தடுப்பூசி முகாம் – தமிழகம் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வீசி கொண்டிருக்கிறது.தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது.45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

மே 1 ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1ஆம் தேதி முதல் நடத்தப்படும்.அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

18 வயதிற்கும் மேலானவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தடுப்பூசி மூலம் ஏற்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவையும், ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவையும் சேர்த்து 60 சதவீதத்திற்கு மேல் எதிர்ப்பு சக்தியை மக்களிடையே ஏற்படுத்துவதே முக்கியக் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளது.