தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் விஜய் சேதுபதி.இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
குறுகிய காலத்தில் அதிக படங்களை நடித்துள்ளார்.மேலும் தற்போது இவரது படங்கள் OTT இல் வரிசை கட்டிக்கொண்டு வருகின்றன.தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்காக, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பையனூரில் 96 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்கட்டமாக 1,000 குடியிருப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தற்போது அங்கு 1000 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த வீடு கட்டும் பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இதையும் படிங்க : உஷார் மக்களே..தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு !



