தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை,தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.
அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தலைவர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து தேர்தல் குறித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பில் விஜய் அனுமதி கொடுத்ததாகவும் 9 மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : என்னது கோவிட் தடுப்புசி போட்டுக்கொண்டால் ஆன்ட்ராய்ட் மொபைல் பரிசா !



