தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் சிவகார்த்திகேயன்.இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டாக்டர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா நடித்துள்ளார்.மேலும் இதில் யோகிபாபு, வினய் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது.இந்த படம் ஓடிடியில் வரும் என்று எதிர்பாக்கப்பட்டது.ஆனால் அதனை படக்குழு மறுத்து வந்தது.

தற்போது இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.மேலும் படத்தை எதிர்பார்த்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம் !



